மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
இதன்போது பேசிய அவர், ”சில அத்தியாவசிய மருந்துகள் மொத்த விற்பனை விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. அந்தக் குறியீட்டின் போக்கைப் பொருத்து அம்மருந்துகளின் விலை தானாக அதிகரிக்கவும் குறையவும் செய்யும்.
அந்த மருந்துகளுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் விலை உயர்வுக்கும் அரசுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அவற்றின் விலையை அரசு உயா்த்தவில்லை. அதுபோன்ற எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்தாா்.