அவசரகாலச் சட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவசரகாலச் சட்டம் தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, கூடிய விரைவில் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேற்படி அறிவித்தலை நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வகையில் நாளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இல்லையேல் 14 நாட்கள் இருக்க அனுமதித்து, பின்னர் காலாவதியாகி அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கூட, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அவசரகால பிரகடனத்தை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.