நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் முழு நாடும் எம்மை சபிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களிலும் அரசியல் இலாபங்களிலும் கவனம் செலுத்தாமல் நாடு எதிர்நோக்கும் எரியும் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை வழங்க முன்வருமாறும் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.