நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒருபோதும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மக்களின் ஆசீர்வாதத்தோடு ஆட்சிக்கு வருவோம் என்றும் மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.