முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
நிதியமைச்சராக அவர் இருந்தபோது நாடாளுமன்றத்திற்கு வராமையால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
அத்தோடு, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. இறுதியாக அவரும் தனது பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, பசில் நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக அண்மைய நாட்களில் வதந்திகள் பரவிய நிலையில், அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகி அமைதியாக அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.