உக்ரைனில் ரஷ்யப் படைகள் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவருவதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், சர்வதேச கோபத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், புடின் ஒரு மிருகத்தனமானவர் என்றும் புடின் ஒரு போர்க் குற்றவாளி என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள் அதன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு புச்சாவின் வீதிகளில் மணிக்கட்டு கட்டப்பட்ட நிலையில் குறைந்தது 11 இறந்த உடல்களை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பூமி கண்காணிப்பு நிறுவனமான மாக்ஸரால் புதிய செயற்கைக்கோளின் உதவியுடன் வெளியிடப்பட்டது.
ஆனால், புச்சாவின் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் எந்த குடிமக்களும் பாதிக்கப்படவில்லை என்று ரஷ்யா கூறுகிறது மற்றும் ஆதாரம் இல்லாமல், நகரத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் அரங்கேற்றப்பட்டதாக கூறுகிறது.