உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் ஆகிய அரசுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், உக்ரைன் மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் கல்வி கடன்களில், உக்ரைன் நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுமாறு வங்கிகளை நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கீவ்வில் உள்ள பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கிழங்கள் கல்வி நடவடிக்கைகளை இணையம் ஊடாக முன்னெடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.