அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகின்றனர் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு பின்னரும் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கக்கோரி மக்கள் முன்னெடுத்த போராட்டம் விலைவாசி அதிகரிப்புடன் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு போன்ற உண்மையான பிரச்சினைகளை துடைத்தெறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சதொச விற்பனை நிலையங்களில் ஏற்கனவே பொருட்கள் தீர்ந்துவிட்டது என்றும் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால், பணவீக்கம் அதிகரித்து மக்கள் மேலும் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.