வடக்கு அயர்லாந்திற்கு வரும் உக்ரைனியர்களுக்கான முதல் ஆலோசனை மையம் பெல்ஃபாஸ்ட் நகர மையத்தில் திறக்கப்படுகின்றது.
நியூரி, கவுண்டி டவுன், கிரேகாவோன், கவுண்டி அர்மாக் மற்றும் பாலிமெனா, கவுண்டி ஆன்ட்ரிம் ஆகிய இடங்களில் மையங்கள் வாரத்தின் பிற்பகுதியில் திறக்கப்படும்
கடந்த பெப்ரவரியில் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு வடக்கு அயர்லாந்திற்கு வந்த உக்ரைனிய அகதிகளின் எண்ணிக்கைக்கு உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் எதுவும் இல்லை, ஆனால் அது சுமார் 300ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உதவி மையங்கள் பல பகுதிகளில் ஆலோசனை வழங்கும். இவற்றில் ஆரோக்கியம், கல்வி, பலன்கள், வேலைவாய்ப்பு, குடியேற்றம், வீட்டுவசதி ஆகியவை அடங்கும்.