மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திகள் ஆதாரமற்றவை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன,தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய பாதுகாப்புச் செயலாளர், இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர்கள் கலந்துகொள்ளும் வழிமுறை இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான அனைத்து விதமான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்தது என்பதால், ஜனாதிபதியின் செயலகத்தால் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர் அழைக்கப்படவோ அனுமதிக்கப்படவோ இல்லை என அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம், சம்பந்தப்பட்ட குறித்த நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னர் குறித்த விவகாரம் கையாளப்படும் என தெரிவித்தார்.