கருங்கடலை பாதுகாக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்நிலையில், கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
எனினும், குறித்த விடயத்தில் ரஷ்யா தொடர்ந்தும் அமைதியாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.