காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடி முன்னேடுக்கும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே தவிர சிறந்த நோக்கங்களிற்காக இல்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டா கோ ஹோம் என்பதன் அர்த்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், அரச தலைவர் பதவி விலகினால் ஆட்சிபொறுப்பை யார் ? ஏற்பது போன்ற விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார் .
மேலும் ஆட்சி கட்டமைப்பு இல்லாமல் நாட்டை பின்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எந்த அரசியல்வாதியும் நாட்டை வேண்டுமென்றே வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதில்லை என்றும் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதோடு ஆர்ப்பாட்டங்கள் அர்த்தபூர்வமானவையாக காணப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.