சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளனர்.
இந்த குழுவில் நிதியமைச்சருடன், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இணைந்துள்ளனர்.
அதன்படி, அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்துக்கு செல்லும் அவர்கள், ஏப்ரல் 19 முதல் 24ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐந்து தவணைகளில் இது இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிலையில் இதன் மூலம் உலக நிதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.