கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம’ கூடாரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூடாரங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொலிஸார் அவற்றை அகற்றியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலி நகரில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்று முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.