புதிய அமைச்சரவையில் தாம் அமைச்சர் பதவியை வகிக்கப் போவதில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இக்கட்டான தருணத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என கருதுவதாகவும் கூறியுள்ளார்.