கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர்.
இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமையவே குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர்.