ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், ரம்புக்கன மற்றும் கேகாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து காயமடைந்த 28 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.