றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த கே. பி.சமிந்த லக்ஷானின் சடலம் கடந்த 21ஆம் திகதி இரவு அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி இன்று ஹிரிவடுன்னேவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதோடு அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் உதவியை பெற்றுத்தருமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது















