ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு பிராந்தியத்தில் சமீபத்தில் நடத்த்ப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்றும் இதில் குழந்தைகள் உட்பட 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில் இவை அனைத்திற்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.
தலிபான்கள் தாங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்துவிட்டதாக கூறுகின்ற போதும் இந்த குழு ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு சவாலாக உள்ளது.
இருப்பினும் குண்டூஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.