போர் முயற்சிக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் விநியோகத்திற்கான காலக்கெடுவைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஓஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகருக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
குறித்த விஜயத்தின்போதே இந்த கோரிக்கையை தான் விடுக்க போவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அமெரிக்க உயர் அதிகாரிகளின் விஜயம் குறித்த உக்ரைன் ஜனாதிபதியின் கருத்தை வெள்ளை மாளிகை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் உக்ரைனுக்குப் பயணம் செய்த அதிகாரிகளில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் புச்சாவில் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.