நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆசிரியர் அதிபர் சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் பதவி விலக தயாராக இல்லை என்றால் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்த தயாராக உள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.