இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளின் இராணுவத்திற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, ”கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் இராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் இராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.