பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பிரதமர் சர்தார் அப்துல் கயூம் நியாசி பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
அவரது சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்ததைக் அடுத்தும் அவருக்கு எதிராக கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்பட்டதை அடுத்தும் இராஜினாமா செய்யும் தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆளும் கட்சியின் 25 உறுப்பினர்கள் தங்களின் பிரதமர் நியாசிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தனர்.
குறித்த பிரேரணையில் அவர் கட்சி அறிக்கையை செயல்படுத்தத் தவறியதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து, நியாசி தனது அமைச்சர்கள் ஐந்து பேரை அமைச்சுப் பதவியில் இருந்து காலையிலேயே நீக்கியுள்ளார். நீக்கப்பட்ட அமைச்சர்களில் தன்வீர் இல்யாஸ், அப்துல் மஜித் கான், அலி ஷான் சோனி, கவாஜா ஃபரூக் மற்றும் அக்பர் இப்ராகிம் ஆகியோர் அடங்குவர்.
பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தவறான நடத்தை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சரத்து 18இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை, கட்சி விஞ்ஞாபனம், தவறான நிர்வாகம், உறவுமுறை மற்றும் தகுதி மீறல் போன்ற காரணங்களால் நியாசி நாடாளுமன்றக் கட்சியின் நம்பிக்கையை இழந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு சர்தார் தன்வீர் இலியாஸின் பெயரை எதிர்க்கட்சியினர் முன்மொழிந்துள்ளனர்.