*வரவு, செலவுத்திட்டத்தில் உள்நாட்டு மூலதன கொள்முதல் மற்றும் கையகப்படுத்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 21,149.47 கோடியில் 25 சதவீதத்தை 2022-2023 ஆம் ஆண்டில் உள்நாட்டு தனியார் தொழில்துறைக்கு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
தனியார் தொழில்துறை, மற்றும் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் ஆரம்ப செயலிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த நிதி வழங்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மூலதன கொள்முதலுக்கான ஒதுக்கீட்டில் இருந்து ஆரம்ப செயலிகள் உருவாக்கும் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு ஆயிரத்து 500 ரூபாய் கோடி ஒதுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை புதுமைகளை வளர்ப்பதையும், பாதுகாப்பில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தொழிலுக்கு மூலதன கொள்முதல் வரவு, செலவுத்திட்டத்தில் 68 சதவீதத்தை ஒதுக்க பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு 84,597.89 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.