அங்காரா மற்றும் பீஜிங்கின் நிதி நிலைமை பலவீனமடைந்து வருவதால், துருக்கிக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கிட்டத்தட்ட ஒரு வழிப்பாதையாக மாறியுள்ளன.
மேலும் இரு நாடுகளும் பொருளாதார மாற்றத்தை அடைவதற்காக மத்திய ஆசிய சந்தையில் புதிய வணிகத்தைத் தேடும் படலத்தினை ஆரம்பித்துள்ளன.
துருக்கியில் மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அனடோலியாவிற்கும் கலிபோலி தீபகற்பத்திற்கும் இடையிலான பயண நேரத்தை வெறும் 6 நிமிடங்களாக குறைக்கும் முக்கிய தொங்கு பாலத்தை சீனா நிறைவு செய்துள்ளது.
இதனடிப்படையில், மொத்த பயண நேரம் ஆறு மணி நேரமாகும், இதில் ஒரு மணி நேர படகு சவாரியும் உள்ளடங்குகின்றது. துருக்கியின் டார்டனெல்லஸ் ஜலசந்தியின் குறுக்கே கனக்கலேயில் கட்டப்பட்ட 4,608 மீற்றர் பாலத்தை துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் திறந்து வைத்தார்.
இப்பாலமானது, முக்கிய நீர்வழிப்பாதையாக இருப்பதோடு ஐரோப்பிய மற்றும் ஆசிய கடற்கரைகளை இணைக்கிறது. கொள்கை ஆய்வுக் குழுவின் கூற்றுக்களின் படி, ஓட்டோமான் பேரரசு முதலாம் உலகப் போரின்போது பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் ரஷ்யப் படைகளை வெற்றிகரமாக தோற்கடித்த 1915இல் கனக்கலே போரின் நினைவாக பாலத்திற்கு அவர் பெயரிடப்பட்டது என்று தெரியவருகின்றது.
உண்மையில், இந்த பாலம் 1915 ஆண்டளவிலேயே பாலம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் மர்மரா மற்றும் ஏஜியன் பிராந்தியங்களில் உள்ள துறைமுகங்கள், புகையிரத மற்றும் விமானப் பாதைகளை நெடுஞ்சாலை போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதாக அமைகின்றது.
இதனால் இந்த பிராந்தியங்களில் உள்ள தொழில்களுக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் சீரான திட்டமிடல் மற்றும் கட்டமைப்பை எளிதாக்கும்’ என மனுஷ்டபா முஸ்தபா தன்ரிவர்டி கூறினார்.
துருக்கிய மற்றும் தென் கொரிய ஒப்பந்தக்காரர்கள் எர்டோகனின் மத்திய தாழ்வார திட்டம், பட்டுப்பாதை முன்முயற்சி, ரயில்வே வழியாக ஐரோப்பாவுடன் சீனாவை இணைக்கும் வகையில் பாலத்தை கட்டினார்கள்.
துருக்கி தனது சந்தைகளை விரிவுபடுத்துவதற்காக அதன் பிராந்தியத்திலிருந்து மத்திய ஆசியாவிற்கும் ரயில் பாதைகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளது.
துருக்கி அதன் மத்திய தாழ்வார திட்டத்தை மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியுடன் இணைக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் கனவுத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியது.
ஒப்பந்தத்தின் கீழ், 2015இல் சீனா உட்கட்டமைப்பு முயற்சிகள் மற்றும் முதலீடுகள், ஆகியவற்றை எண்ணெய் மற்றும் சுரங்கத் துறைகளில் முன்னெடுத்தது.
மறுபுறம், சீனாவும் தனது எல்லைக்குள் தொங்கு பாலத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ல்விஜியாங் பாலம் யுக்ஷி நகரம் மற்றும் யுனான் பகுதிகளை இணைக்கிறது என்று கொள்கை ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
யுனான் பிராந்தியமானது மண்டலம் மற்றும் பாதை திட்டத்தில் சீனாவின் இறக்குமதி நுழைவாயில் ஆகும். ஜனாதிபதி ஷி ஜின்பிங், யுனான் மண்டலம் மற்றும் பாதை திட்டத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும், அதற்காக சிறந்த பொருளாதார இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
யுனான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 41 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை முக்கிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. பொருளாதாரத் திருப்பத்தை அடைவதற்காக துருக்கி மத்திய ஆசிய சந்தையில் தனது கண்களை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.