விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பாக அசாஞ்சே விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
இந்த குற்றத்திற்காக அமெரிக்காவில் அவருக்கு 175 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் அவரை நாடுகடுத்தும் முடிவை எடுக்க பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளர் பிரித்தி படேலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தி படேல் அதற்கு அனுமதி வழங்கினால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அசாஞ்சேவின் வழக்கறிஞர்களுக்கு மே 18 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.