தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா நேற்று சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பெண்களும் குழந்தைகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்த மரியுபோலில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை கிரிமியாவிலிருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை மேற்கில் உள்ள ஒடேசா நகரின் பிரதான விமான நிலையத்தில் ஓடுபாதையை அழித்ததாக பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
குறித்த மோதல் காரணமாக நகரங்கள் தரைமட்டமாகி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, 5 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஒன்பது வார தாக்குதலில் தலைநகர் கீவைக் கைப்பற்றத் தவறிய மொஸ்கோ தனது கவனத்தை உக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கில் திருப்பியுள்ளது.
நூற்றுக்கணக்கான உக்ரேனிய துருப்புக்களும் பொதுமக்களும் அசோவ்ஸ்டல் பகுதியில் தஞ்சம் புகுந்தபோதும், ஏப்ரல் 21 அன்று மரியுபோலில் ரஷ்யா வெற்றியை அறிவித்தது.