இந்தியாவின் வடமேற்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகையில், ” நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வெப்பநிலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில், அங்கும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்துள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் வெப்ப நிலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக பஞ்சாப் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புழுதிப் புயல் மற்றும் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.