சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் கைகளில் மெலுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கைகளில் மெழுகுதிரி ஏந்திய ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.