உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு குறித்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
மேலும் குறித்த ரயில் நிலையங்களின் மின்சார விநியோகங்களை குண்டுவீசித் தாக்கியதாக அமைச்சு கூறியுள்ளது.
இருப்பினும் குறித்த ஆறு ரயில் நிலையங்கள் ஊடாக உக்ரேனியப் படைகளுக்கு எந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பதை பாதுகாப்பு அமைச்சு வெளிப்படுத்த தவறிவிட்டது.
இதேவேளை வெட பொருட்கள், பீரங்கிகளை சேமித்து வைத்திருக்கும் நான்கு டிப்போக்கள் உட்பட மொத்தம் 40 உக்ரேனிய இராணுவ இலக்குகளை தகர்த்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.