பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நீதிபதிகள் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது எனத் தெரித்துள்ளனர்.
அதேநேரம் குடியரசு தலைவர் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது எனவும், ஆனால் இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.