எரிபொருளுக்கான வெளிப்படையான விலைச் சூத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவது இலாபம் ஈட்டுவதற்காக அல்ல என்றும் நட்டத்தைக் குறைப்பதற்காகவே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பெரும்பாலான எரிபொருளை ரயிலில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது இலங்கையில் போதியளவு பெற்றோல் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூன்று நாட்களில் பெற்றோல் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.