நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
பகலில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில்1மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,LP,Q,R,S,T,U,V,W இல் காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
M,N,O,X,Y,Z வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.