ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதியப் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பரமாணம் செய்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்த அவர், கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரைக்கு சென்று மகாசங்கத்தினரின் ஆசிகளைப் பெறவுள்ளார். அதன் பின்னர் கங்காராம கோயிலுக்கும் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான 130 ஆசனங்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சுமார் 25 உறுப்பினர்கள் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.
இதேநேரம், கடந்த அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு மற்றும் 11 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஆதரவையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.