பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் பலூச் விடுதலை இராணுவம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீனர்களும் ஒரு பாகிஸ்தானிய பிரஜையையும் கொல்லப்பட்டதையடுத்து, ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானை விட்டுவெளியேறி வருகின்றார்கள்.
கராச்சி விமான நிலையத்தில் இருந்து ஏராளமான சீனர்கள் வெளியேறுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ஆசாத் மாலிக் என்ற பாகிஸ்தானியர், தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அமெரிக்கவினால் அனுசரணை வழங்கப்படும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் சீனர்கள் மீது வெடிகுண்டு வீசியது.
2000 சீனர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார்கள். எமது எதிரிகள் தங்கள் பணியில் வெற்றி பெறுவது போல் தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பாகிஸ்தானியரான சையத் ஷயான், நீங்கள் எந்த சதியையும் கண்டுபிடிக்காததால் இப்போது சீனர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றார்கள். இதனால் அபிவிருத்தித் திட்டப்பணிகள் மந்தமடையும். ஆனால் அமெரிக்கா தனக்குத் தேவையானதை அடைகின்றது’ என்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சலீம் கான் என்பவர் தனது டுவிட்டரில், ‘கராச்சி விமான நிலையத்தின் ஊடாக அச்சுறுத்தல்களால் சுமார் 2000 சீனர்கள் வெளியேறினர். திட்டங்கள் மூடப்படும் என்பதால் மிகவும் சோகம்’ என்று எழுதினார்.
ஒரேமண்டலம் மற்றும் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் ஏராளமான சீன பொறியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பல சீன ஆசிரியர்கள் பாகிஸ்தானிய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாண்டரின் மொழியைக் கற்பிக்கின்றனர்.
இது பழங்குடியினரான பலூச் மற்றும் சிந்தி அரசியல் ஆர்வலர்கள் தங்கள் பிராந்தியத்தில் சீன முதலீட்டை எதிர்க்கிறார்களா என்று எரிச்சல் அடைந்துள்ளது.
மூன்று, சீன ஆசிரியர்கள் மரணித்த சமீபத்திய தற்கொலைத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, 54 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாகிஸ்தானின் பொருளாதார திட்டங்கள் பாதிப்படையலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.