பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துரையாடவுள்ளனர்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பல உறுப்பினர்கள் நேற்று பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர்.
பிரதமருக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.