நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைய விண்ணப்பிக்கப் போவதாக சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு அச்சத்துக்கு எதிராக பாதுகாப்பு தேடிக்கொள்ளும் பொருட்டு ஃபின்லாந்தை தொடர்ந்து சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது.
சுவீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மக்தலீனா எண்டர்சன் பங்கேற்றுப் உரையாற்றுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்புக் கொள்கை வரிசையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை காண்கின்றோம். நேட்டோவில் அங்கம் வகிக்கும்போது, முறையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் சுவீடனுக்குத் தேவை. நேட்டோவில் இணைவதன் மூலம் அந்தப் பாதுகாப்பு கிடைக்கும். அண்டை நாடான ஃபின்லாந்துடன் இணைந்து சுவீடன் செயற்படும்’ என கூறினார்.