நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து எரிபொருளினை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரினால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் பொலிஸ்மா அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் எரிபொருளின் அளவு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் இந்த நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக கடந்த சில தினங்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் விசேடமான முறையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்துள்ளது.