ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்ததாகவும் தென்கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றைச் சுற்றியுள்ள நகரங்களில் சமீபத்திய நாட்களில் ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறினார்.
இன்று புதன்கிழமை காலை மட்டும் 18 சுற்று ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை ஒன்றும் அழிவடைந்ததாகவும் தெரிவித்தார்.
மக்கள், வீடுகள், தொழிற்சாலைகள் இல்லாத பிராந்தியமே ‘ரஷ்ய உலகம்’ என்றும் அதனையே லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அவர்கள் திணிக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.