அதிக இடர் மற்றும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 148 வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்து 908 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு அதிகரிப்பு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், காலி, திருகோணமலை, கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.