ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்களினால் எழுத்துமூலமான கோரிக்கைக்கு அமைய சிற்றுண்டிச்சாலையில் இருந்து உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
இதேவேளை, கோப், கோபா உள்ளிட்ட குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் திருத்த வரைவை அரசாங்கம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.