இலங்கையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நாடளுமன்ற அனுமதி பெறப்படைத்தமை காரணமாக காலாவதியாகியுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே மாத தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரகடனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவசரகால சட்டம் செயலில் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவசரகாலச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஆனால் அதை முன்வைக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.