சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்றைய தினமும் (புதன்கிழமை) விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று முன்தினம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்கள் மூலம் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதன் முதலாவது கப்பல் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயுடன் நாளை நாட்டை வந்தடையவுள்ளதா லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.