கல்வித்துறையின் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
புதிய கல்வி அமைச்சராக அவர் இன்று (பதன்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றபோதே இதனைத் தெரிவித்தார்.
பரீட்சை நடத்துதல், பெறுபேறுகளை வழங்குதல், பாடப் புத்தகங்களை விநியோகித்தல், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல் போன்ற அனைத்து கல்வித்துறையின் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மீளமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதுடன் பிரிவெனா பிரிவின் பணிகளை மீளமைப்பதும் மிகவும் முறையாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.