மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் தலா 200,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு மாதத்தின் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள மற்றொரு சகோதரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பில் உள்ள இரு பிரபல ஹொட்டல்களில் மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் பயங்கரவாத தாக்குதலை நடத்தியிருந்தனர்.