இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) என்ற அமைப்பு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான காலப்பகுதியில் சுமார் 372 பில்லியன் ரூபாய் நட்டம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.