எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிலங்களிலும் உணவுப் பயிர்களை பயிரிடுவது மிகவும் அவசியமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கான சாவால்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் “உணவு கிடைக்கவில்லை என்றால் நிதி இருப்பதில் அர்த்தமில்லை. எனவே, கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நிலத்திலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதே செய்ய வேண்டும், ”என்று அவர் குறிப்பிட்டார் .
அத்துடன் அனைத்து அமைச்சர்களும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்க வேண்டும் என்பதோடு நாடு எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்க, விவசாய அதிகாரிகளுடன் அரசு ஊழியர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.