கடந்த பெப்ரவரி 24 முதல் மே 30 ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்னிக்கை 9,029 என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.
அதன்படி இதுவரை 4,113 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 4,916 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியது.
இருப்பினும் மரியுபோல், இசியம் மற்றும் போபாஸ்னா போன்ற பகுதிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த புள்ளிவிபரங்களையும் இணைத்தால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
கனரக பீரங்கிகள், ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.