28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.
இவற்றை இரண்டு தனித்தனி தொகுதியாக நன்கொடையாக வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜோர்தான் மற்றும் மலேசியாவில் உள்ள ஒரு அமைப்பு இலங்கைக்கு மருந்துகளை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை வழங்க சுவிட்சர்லாந்தில் உள்ள பௌத்த அறக்கட்டளை அமைப்பும் முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை பங்களாதேஷ் அரசாங்கம் நேற்று இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமாக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.