நாட்டின் முக்கிய பொருளாதார நகரமான ஷாங்காய் இரண்டு மாத முடக்க கட்டுப்பாடுகளுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை முதல் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
சீனாவின் கொள்கையான “ஜீரோ கொவிட்” நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் நிலையில் சுமார் 650,000 மக்கள் தொடர்ந்தும் வீடுகளில் இருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதியும் மீண்டும் முடக்கப்படும் நிலையை எதிர்கொள்கின்றது.